×

தமிழகம் முழுவதும் 50 டிஎஸ்பிக்கள் டிரான்ஸ்பர்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழக டிஜிபி திரிபாதி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுரை நகர நில அபகரிப்பு சிறப்பு பிரிவில் இருந்த அலெக்சாண்டர் காஞ்சிபுரம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவுக்கும், கிருஷ்ணகிரி ஓசூர் டிஎஸ்பியாக இருந்த மீனாட்சி காஞ்சிபுரம் தேசிய போதை தடுப்பு பிரிவு சிஐடிக்கும், காஞ்சிபுரம் தேசிய போதை தடுப்பு பிரிவு சிஐடியில் இருந்த ஜூலியஸ் சீசர் வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனராகவும், வண்ணாரப்பேட்டையில் இருந்த முத்துகுமார் எம்.கே.பி.நகர் உதவி கமிஷனராகவும், எம்.கே.பி.நகரில் இருந்த அழகேசன் சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை சிவில் சப்ளை சிஐடி ஜீவானந்தம் சென்னை சிபிசிஐடி டிஎஸ்பியாகவும், சிபிசிஐடியில் இருந்த சத்தியமூர்த்தி ஆவடி உதவி கமிஷனராகவும், ஆவடியில் ஜான்சுந்தர் சென்னை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும், சென்னை தலைமையிடத்தில் இருந்த சரவணன் சென்னை மாநில குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாகவும், காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி சர்மா சென்னை சிபிசிஐடிக்கும், சென்னை சிபிசிஐடியில் இருந்த கனகராஜ் காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பிக்கும், திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் இருந்த மோகன்ராஜ் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்த ஜெயசிங் புளியந்தோப்பு உதவி கமிஷனராகவும், புளியந்தோப்பு விஜயானந்த் சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராகவும், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஆனந்தகுமார் திருவொற்றியூர் உதவி கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்த பாஸ்கர் ராயப்பேட்ைட உதவி கமிஷனராகவும், அங்கிருந்த கிருஷ்ணமூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பியாக இருந்த கல்பனா டுட்ட  திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக என தமிழகம் முழுவதும் 50 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu ,DGP Tripathi , DSP
× RELATED வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து...