×

இந்திய பொருளாதாரத்தின் மொத்த வளர்ச்சி 5% கீழே செல்ல வாய்ப்பு :பொருளாதார ஆய்வாளர்கள் கணிப்பு

டெல்லி : இந்திய பொருளாதாரத்தின் மொத்த வளர்ச்சி 5% கீழே செல்ல வாய்ப்பு உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2வது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த மாதம் 29ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஆனால் வளர்ச்சிக்கான இந்த அளவுகோல் 5% முதல் 4.2% ஆக குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுளள்னர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2011-2012ம் ஆண்டின் வளர்ச்சி விகிதத்தை அடிப்படை கணக்கீட்டு ஆண்டாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சி 4.2%ஆக குறைந்தால் அது மிகவும் குறைவான வளர்ச்சியாக பதிவாக வாய்ப்புள்ளது. மத்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டு முறையையே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த கணக்கீட்டின் படி 5% பொருளாதார வளர்ச்சி குறையும் என ஆய்வாளர்கள் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : India ,analysts , Economy, Growth, Analysts, Forecasting, BJP, GDP
× RELATED வளர்ச்சி பாதிப்பதை தடுக்க...