×

பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இருவர் கைது: பாகிஸ்தான் போலீசார் விசாரணை

பாகிஸ்தான்: பாகிஸ்தானுக்குள் ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த் மைதம் சட்ட விரோதமாக நுழைய முயன்றார். தெலங்கானாவைச் சேர்ந்த பிரசாந்த் மைதம் என்ற மென்பொருள் பொறியாளர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி துர்மி லால் ஆகியோர் கடந்தவாரம் பஞ்சாப் மாகாணம், பஹவல்பூரில் உள்ள சோலிஸ்தான் பாலைவனப் பகுதியில் பாகிஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பஹவல்பூர் போலீஸ் நிலையம் இவர்கள் இருவர் மீதும் சட்ட விரோத நுழைவுச் சட்டத்தில் நவம்பர் 14ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. தங்கள் அடையாளம் குறித்த எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே இல்லாமல் எல்லைத் தாண்ட இருவரும் முயற்சித்துள்ளனர். ஹைதராபாத் மென்பொறியாளர் பிரசாந்த் மைதம் துருக்கியில் உள்ள தன் காதலியைச் சந்திக்க பாகிஸ்தான், ஆப்கான் வழியாகச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. ஆனால் மத்தியப் பிரதேச விவசாயி தெரியாமல் எல்லைக் கடந்து சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பஹவல்பூர் நீதித்துறை மேஜிஸ்ட்ரேட் இருவரையும் முல்டானில் உள்ள பெடரல் விசாரணை முகமையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் இது எஃப்.ஐ.ஏ விசாரணை வலையத்துக்குள் வராததால் இரண்டு இந்தியர்களும் முல்டானிலிருந்து திருப்பி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டதாக பஹவல்பூர் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. பிரசாந்த் இங்கு வந்து சிக்கியது அவரது அதிர்ஷ்டம் ஆப்கானில் மாட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இருவருமே முறையான சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Pakistan ,persons , Illegal, two entrants arrested, Pakistani, police, investigation
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...