×

கிராமி விழாவில் அரை நிர்வாணமாக விருது பெற்ற பாப் பாடகி

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் இசைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு அமெரிக்க-லத்தீன் கிராமி விருது வழங்கும் விழா லாஸ்வேகாஸ்  நகரில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த மாற்று இசை ஆல்பத்திற்கான விருது சிலி நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி  மோன் லாபர்டேவுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அவரும் இந்த விருது விழாவில் பங்கேற்றார். விழாவில் அவரது பெயர் அழைக்கப்பட்டதும், சிவப்பு  கம்பளத்தின் மீது கருப்பு நிற உடையில் ஒய்யாரமாக அவர் நடந்து வந்தார்.

விழாவில் பங்கேற்றவர்கள், சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகையாளர்கள் என ஒட்டு மொத்த அரங்கின் பார்வையும் அவர் மேல் பதிந்து இருந்தது.  லாபர்டே மேலாடை எதுவும் அணியாமல், அரை நிர்வாணமாக விருது பெற சென்றதே இதற்கு காரணம். அவர் தனது மார்பு பகுதியில் சிலி மொழியில்,  அவர்கள் என்னை சித்திரவதை செய்கின்றனர். பலாத்காரம் செய்து கொன்று விடுகின்றனர்’ என்று எழுதி இருந்தார். தென் அமெரிக்க நாடான சிலியில்,  அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

போக்குவரத்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் நடந்த போராட்டத்தில்  வன்முறை ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். ரப்பர் குண்டுகளை கொண்டு நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 200க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்தனர். இதனை கண்டிக்கும் வகையில், மேலாடை இன்றி அரை நிர்வாணமாக விருதை  பெற்றதாகவும் இதனை சிலி மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் லாபர்டே விழாவில் கூறியுள்ளார்.

Tags : Grammy ceremony, half naked, award, pop singer
× RELATED முகலிவாக்கத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா : 1000 பேருக்கு அன்னதானம்