×

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைக் காணும்: தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் குழு

டெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைக் காணும் என்று பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி தொடர்பான தேசியக்குழு  தெரிவித்துள் ளது. மக்களின் நுகர்வு திறன் சரிந்து தேவை குறைந்துள்ளதால், வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அக்குழு தெரிவித்து உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி 4.9 சதவீதமாக குறையும் என்று கூறி உள்ளது. முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக சரிந்தது. இந்நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் மேலும் குறையக் கூடும் என்று அக்குழு தெரிவித்து உள்ளது. மேலும், 2019-20-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தின் நிதி மோசடியால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து உள்ளன. அதுவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அந்தக் குழு தெரிவித்து உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என கூறியிருந்தது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம், ஜி.டி.பி மதிப்பை 6.2 சதவிகிதம் என்று 6 புள்ளிகளைக் குறைத்தது. அதனையடுத்து, அக்டோபரில் வெளியிட்ட அறிக்கையில் முந்தைய கணிப்பிலிருந்த மதிப்பை 0.4 புள்ளிகள் குறைத்து 5.8 சதவிகிதத்திற்கு கொண்டு சென்றது. இதனையடுத்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்பு மதிப்பிட்டதை விட பொருளாதார வளாச்சியில் காணப்படும் தேக்க நிலை நீடிக்கிறது.

Tags : India ,National Economic Research Council , India, Economic Development, National Economic Research Council
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!