×

30,134 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனில் அனில் அம்பானி ராஜினாமா

மும்பை:  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.366 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில்,  2வது காலாண்டின் நிதிநிலை அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில் இந்த இழப்பு ரூ.30,142 கோடியாக அதிரடியாக உயர்ந்தது.  

இதையடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்  பதவியில் இருந்து விலகும் முடிவை அனில் அம்பானி எடுத்தார். இவருடன் இயக்குனர்களாக உள்ள சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர், சுரேஷ் ரங்காச்சார் ஆகியோரும் நேற்று பதவி விலகுவதாக அறிவித்தனர். வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நஷ்டத்துக்கு அடுத்த இடத்தில் ரிலையன்ஸ் இருந்ததால் இந்த பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.Tags : Anil Ambani ,Reliance Communications , Anil Ambani resigns , Reliance Communications
× RELATED சீன வங்கிகளிடம் வாங்கிய ரூ.5,400 கோடி கடனை...