×

கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் மீள முடியாத துயரம்

புதுக்கோட்டை: கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் மீள முடியாத துயரத்தில் உள்ளனர். 59 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டு தனது அசுர தாக்குதலால் நிகழ்த்திய கஜா புயல் தாக்குதல் தற்போது ஓராண்டாகியுள்ளது. இந்த கோர தாக்குதலின் பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலை தான் நீடிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி இரவு தான் இந்த கஜா புயல் தாக்குதல் நடந்தது.

ஒட்டுமொத்த டெல்டா பகுதியினுடைய மக்களையும் புரட்டிப்போட்ட இந்த புயலின் தாக்குதலுக்கு விவசாயம் மட்டுமல்ல மனிதருடைய வாழ்வும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கஜா புயலின் கோர தாக்குதலுக்கு லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. பட்டுக்கோட்டையை பொறுத்த வரை தென்னையை நம்பி தான் அதிகளவு வசித்து வருகிறார்கள்.

தற்போது வரை ஓராண்டாகியும் புயலால் விழுந்த தென்னை மரங்கள் அகற்றப்படாமல் இருக்கின்றன. அதேபோன்று அங்கு விழுந்திருக்கின்ற தென்னைகளுக்கு மாற்றாக புதிய கன்றுகள் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதேபோன்று விழுந்து கிடக்கின்ற வீடுகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஓராண்டாகியும் இந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Tags : storm ,Gaja ,Delta ,districts , Kaja Storm
× RELATED வலுவிழந்தது புரெவி புயல்