×

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை மீறினால் டிஜிபிதான் பொறுப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை: சிலைக் கடத்தல் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த சிறப்பு அமர்வை ரத்து செய்து தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி உத்தரவிட்டார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டால் தொடரப்படும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் இந்த அமர்வு விசாரிக்க முடியாத வகையில் ஒரு நிர்வாக உத்தரவையும் தலைமை நீதிபதி பிறப்பித்தார்.
 இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் கடந்த 3 மாதங்களாக விசாரிக்கப்படாமல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்தது.   தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்ததையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை மீண்டும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வே விசாரிக்கும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி உத்தரவிட்டார்.

 இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கான அதிகாரிகள், காவலர்கள் நியமனம், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று  தமிழக அரசுக்கு எதிராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணை வந்தது.  அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராகினர்.  இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் இனிமேல் அரசு வக்கீல்கள் வராததால் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரக்கூடாது. இதுவே இறுதி அவகாசம். இந்த நீதிமன்றம் பொக்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பாவார் என்றனர்.

Tags : Digipit ,Statutory Trafficking Prevention Digipit ,High Court ,Tamil Nadu , Idol Trafficking, Government of Tamil Nadu, High Court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...