×

சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என சட்டமன்றத்தில் முதல்வர் தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என சட்டமன்றத்தில் தவறான தகவல் தந்ததற்காக முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டமன்றத்தில் 2017-ல் 1466 கொலைகள் நடந்ததாக கூறிய முதல்வர் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துக்கு 1613 கொலை நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினார். அதிமுக ஆட்சிக்கு கொலை போன்ற கொடிய குற்றங்களை தடுக்கும் ஆற்றல் துளியும் இல்லை என்பதை முதல்வர் உணர வேண்டும் என கூறினார்.


Tags : Chief Minister ,misrepresentation ,Legislature ,Stalin. , Chief Minister , Legislature , regret the misrepresentation ,law and order,Stalin
× RELATED சொல்லிட்டாங்க...