×

உயிருக்கு ஆபத்து மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் மீது அசுரன் பட நாயகி பரபரப்பு புகார்

திருவனந்தபுரம்: மலையாள  சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு  வாரியர். நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி. சமீபத்தில் தனுஷ் நடித்த அசுரன் தமிழ் படத்திலும் அவர் நடித்தார். இவர் மலை யான திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய ‘ஒடியன்’ படத்தில் மோகன்லாலுக்கு  ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு மஞ்சு வாரியர் வராததற்கு ஸ்ரீகுமார் மேனன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பல   நிகழ்ச்சிகளில் மஞ்சு வாரியருக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இந்த   நிலையில் நடிகை மஞ்சு வாரியர் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவிடம்  அளித்துள்ள புகார் மனு வில் கூறியிருப்பதாவது: இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனால் என் உயி ருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

‘ஒடியன்’ படம்  வெளியான  பிறகு சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழும்ப ஸ்ரீகுமார் மேனன் தான் காரணம். அவர் நிறுவனத்தின் மேற்பார்வையில் இருந்த என் அறக்கட்டளை பொறுப்பை அவரிடம் இருந்து திரும்ப பெற்று கொண்டதால் அவர் இவ்வாறு செய்கிறார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.  ஆனால், தன் மீதான புகாரை மறுத்துள்ள ஸ்ரீகுமார் மேனன், ‘‘நான் தான் அவரை வளர்த்துவிட்டேன். இப்போது என் மீதே புகார் கூறுகிறார். அதை எதிர்க்கொள்ள தயார்’’ என்று கூறியுள்ளார்.


Tags : Sreekumar ,Malayan , Life-threatening, Malayalam director Sreekumar is a monster movie heroine
× RELATED பொருள் சேதத்தை மீட்டெடுக்கலாம் தீ...