×

மாணவர்களுக்கு 14417 எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: மாணவர்கள், பெற்றோர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உட்பட துறை சார்ந்த தகவல்கள் மற்றும் உயர்கல்வி, உளவியல் ஆலோசனைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதற்காக  இலவச தொலைபேசி எண் 14417 என்ற கடந்த மார்ச் 1ம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. ஆனாலும் பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் இலவச எண் குறித்து தலைமையாசிரியர்கள் மீண்டும் எடுத்துரைத்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். 14417 எண்ணுக்கு வரும் புகார்கள், குறைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளம் மூலம் அனுப்பப்படும்.


Tags : school department ,School Education Directive. , For students, the number 14417, Awareness, should be established, the school department, the directive
× RELATED விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி