×

கல்லீரல் பிரச்னை அமிதாப் அட்மிட்

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (77), கடந்த 1982ம் ஆண்டு கூலி இந்தி  படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்தபோது விபத்தில் சிக்கினார். வில்லனாக நடித்தவர், அமிதாபின் வயிற்றில் நிஜமாக தாக்கிவிட்டார். உடனே அமிதாபை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையின்போது அவருக்கு ஹெபிடைடிஸ்  பி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.  இதனால், அவரது கல்லீரல் 75 சதவீதம் பாதித்தது. அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அவர் அவதிப்படுகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அமிதாப்புக்கு  மீண்டும் கல்லீரல் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


Tags : Amitab , Liver Problem
× RELATED ராமர் கோயிலை மூடுவதை தடுக்கவே 400 எம்.பி.க்கள் வேணும்: மோடி பிரசாரம்