×

2 நாட்களாக குறைந்து வரும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.29,152-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.9 குறைந்து ரூ.3,644-க்கும், சவரன் ரூ.29,152-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் ஒரு கிராம் வெள்ளி ரூ.49.10 காசுகளுக்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது.

பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை சரிந்து வருகிறது. இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.29,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.256 குறைந்த நிலையில் இன்றும் ரூ.72 குறைந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Trading, Gold price drops, Gold price, Silver price,
× RELATED சென்னையில் ஏற்ற இறக்கத்துடன்...