×

தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கியமான பருவமழை என கருதப்படும் தென்மேற்கு பருவ மழை கடந்த 4 மாதங்களாக நீடித்து நல்ல மழை பொழிவு ஏற்பட்டது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நாளை முதல் குறையும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 20ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட நிலை காணப்படும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக் கல்லாரில் 7 செ.மீ. மழையும், நாமக்கல் பாப்பாரப்பட்டியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. அதே நேரம் திருச்சுழி, திருவாடானை, மேட்டுப்பாளையம், நடுவட்டம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ.மழையும் சூலூர்,பொன்னாகரம், தாம்பரம் ஆகிய 2 இடங்களில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.  

இதனிடையே வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸும்  பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் மீனம்பாக்கம், அனகாபுத்தூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதற்கு முன்னதாக அக்டோபர் 20-ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : districts ,Coimbatore ,Salem ,Paddy ,Sivagangai ,Ramanathapuram ,Thoothukudi , Southwest, Meteorological Center, Heavy Rain, Monsoon
× RELATED மக்களுக்கு ஓர் ஜில் அறிவிப்பு!: மே...