×

விலை குறைவான ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எஸ்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள் மாடல் கிளாசிக் 350. இதையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, விலை குறைவான கிளாசிக் 350 மாடலை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எஸ் என்ற பெயரில் இப்புதிய மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளில் கொடுக்கப்படும் குரோம் பூச்சுடைய அலங்கார பாகங்கள் நீக்கப்பட்டு கருப்பு வண்ண பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாடலின் பெட்ரோல் டேங்கில் எளிமையான லோகோ பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்குகளில் கொடுக்கப்படும் டேங்க் கிரிப்பும் நீக்கப்பட்டுவிட்டது. இப்புதிய மாடலானது பியூர் பிளாக் மற்றும் மெர்குரி சில்வர் என்ற இரண்டு வண்ணத்தேர்வுகளில் கிடைக்கும்.

இப்புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எஸ் மாடலுக்கு ₹1.45 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ள நிலையில், இப்புதிய கிளாசிக் 350 எஸ் மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் ₹1.54 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதைவிட, ₹9,000 குறைவான விலையில் கிளாசிக் 350 எஸ் மாடல் வந்துள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 எஸ் மாடலைப்போன்றே, அண்மையில் ராயல் என்பீல்டு புல்லட் 350 மற்றும் 350 இஎஸ் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைவான மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. குரோம் பாகங்களுக்கு பதிலாக கருப்பு வண்ணப் பூச்சுடைய பாகங்களை பயன்படுத்தி உள்ளனர். குறைவான விலையில் வந்திருக்கும் புல்லட் மோட்டார் சைக்கிள்கள் புல்லட் 350 எக்ஸ் மற்றும் புல்லட் 350 எக்ஸ் இஎஸ் என்ற பெயரில் கிடைக்கின்றன. புல்லட் 350 எக்ஸ் மாடலுக்கு ₹1.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், புல்லட் 350 எக்ஸ் இஎஸ் மாடலுக்கு ₹1.21 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.Tags : Royal Enfield Classic 350 ,Royal Enfield , Royal Enfield, Classic, 350, S
× RELATED பெருங்களத்தூரில் கற்கள் வீசி ரயிலை...