×

டயட் அடை

செய்முறை : கொள்ளு, வெள்ளை சன்னா, அரிசியை முதல் நாள் இரவே ஊற போடவும். மறுநாள் காலை கொத்தம‌ல்லி, புதினா, க‌றிவேப்பிலை, சின்ன‌ வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும். பார்லியை அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன் ஊற வைக்கவும். வால் ந‌ட்டை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊற‌ வைத்து தோல் எடுக்கவும். பூண்டு, இஞ்சியை விழுதாக அரைக்கவும்.  இப்போது அரிசியை கிரைண்டரில் போட்டு ந‌ன்கு அரைத்து மீதி உள்ள‌ கொள்ளு, வெள்ளை சென்னா, பார்லி, வால் ந‌ட்டையும் சேர்த்து முக்கால் ப‌த‌த்திற்கு அரைக்கவும். அரைத்த‌ க‌ல‌வையில் சின்ன வெங்காய‌ம், கொத்தம‌ல்லி, புதினா, க‌றிவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல் காய்ந்ததும் அடையாக வார்த்து எடுக்கவும்.
உடலுக்கு சத்தான, நாவிற்கு சுவையான டயட் அடை ரெடி.

Tags : Diet
× RELATED விலங்குகளையும் கொரோனா தாக்கும்...