×

அரசு திட்டங்களுக்கு எதிரானவர் சமூக ஆர்வலர் இல்லை பியூஸ் ஒரு சமூக விரோதி: நீதிமன்றத்தில் அரசு வாதம்

சேலம்: சேலம் பாஜக அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ், கடந்த மாதம் 28ம் தேதி வைத்து தாக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டனர். இதுதொடர்பாக பியூஸ் மானுஸ் மீது, 7 பிரிவுகளின் கீழும், பாஜவினர் மீது 3 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பியூஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி குமரகுரு முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.பியூஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாபா.மோகன் வாதிடுகையில், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் , சமூக சேவை செய்து வருகிறார். ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வருகிறார். இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அவதூறாக சமூக வலைதங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்க பாஜ அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்தவர்கள் கடுமையாக தாக்கினர். ஆனால், அவர் மீது 124 ஏ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவை நீக்குவதுடன், முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார். இதற்கு அரசு வழக்கறிஞர் தனசேகரன், ‘‘சமூக ஆர்வலர் என்ற  பெயரில் அரசின் திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் ஒரு சமூக விரோதி. அவருக்கு முன்ஜாமீன் கொடுக்க கூடாது’’ என்றார். இதையடுத்து நீதிபதி குமரகுரு, வழக்கை ஒத்திவைத்தார்.

Tags : court ,Fuse , Government programs, social activist, pews, court
× RELATED கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்த...