×

எம்எல்ஏ வீட்டின் முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வ.சின்னக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் சின்னராசு. இந்நிலையில் நேற்று மதியம் உளுந்தூர்பேட்டையில் வசித்து வரும் எம்எல்ஏ குமரகுரு வீட்டிற்கு வந்த சின்னராசு கட்சிக்கு உழைத்த எனக்கு ஏன் குளம் மராமத்து வேலை வழங்கவில்லை எனக்கூறி திடீரென கையில் இருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக்கொண்டார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரிடம் உனக்கு ஏற்கனவே எம்எல்ஏ, குளம் மராமத்து பணி வேலை வழங்கிவிட்டார். ஏன் எம்எல்ஏவிடம் கேட்காமல் செய்தாய் என கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Tags : volunteer ,AIADMK ,house ,MLA , MLA, AIADMK volunteer, trying to fire
× RELATED தடுப்பூசி குறித்து குற்றச்சாட்டு...