×

நீரவ் மோடிக்கு அக்.17 வரை காவல் நீட்டிப்பு

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி  மோசடி செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று இவர் விசாரணைக்காக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம்  ஆஜரானார். அப்போது, அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 17ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Neerav Modi ,Neerav Modi of Custody of Extension , Extension of custody ,Neerav Modi till Oct 17
× RELATED ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர்...