×

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத் சிங்..!

பெங்களூரு: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இலரகு போர்விமானமான தேஜஸில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்தார். இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனம்‘ தேஜஸ்’ என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்துள்ளது. இது, விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை கடற்படையிலும்  பயன்படுத்த  முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேஜஸ் விமானத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. விமானம் தாங்கி போர் கப்பல்களில் தரையிறங்கும் போது, குறைந்த தூரத்தில் தரையிறக்க வேண்டும். இதற்காக, இந்த விமானத்தின் பின் பகுதியில் ஒரு கொக்கி பொருத்தப்படும். கப்பலில் தரையிறக்கும்போது, இந்த கொக்கி கப்பலின் தரைப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் 3 இரும்பு கயிறுகளில் ஏதாவது ஒன்றில் சிக்கி நிற்கும்.


alignment=



அப்படி நிற்கவில்லை என்றால், அந்த விமானம் மீண்டும் மேலே பறந்து சென்று அடுத்த முயற்சியில் தரையிறங்க வேண்டும். இந்த சோதனை கோவா கடற்கரையில் உள்ள கடற்படை தளத்தில் கடந்த 13-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. குறைந்த தூரத்தில் தரையிறங்கும் சோதனையை தேஜஸ் வெற்றிகரமாக முடித்தது. இதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, கர்நாடாகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வருகை தந்துள்ளார்.  அவர், தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டு சென்றார்.


alignment=



இதன்பின் விமானத்தில் ஏறிய அவர் சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்து பின்னர் புறப்பட தயாரானார்.  தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை தளபதி என். திவாரி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ராஜ்நாத் சிங் விமானத்தில் பயணிம் செய்தார். இதன்மூலம், தேஜஸ் விமானத்தில் பயணிக்கும், நாட்டின், முதல் ராணுவ அமைச்சர் என்ற பெருமை, ராஜ்நாத் சிங்கிற்கு கிடைத்தது.

Tags : Rajnath Singh ,Tejas , Tejas fighter plane, Rajnath Singh
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...