×

மாத்திரைக்குள் கம்பி பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை: கோவை கரும்புக்கடையில் பல்வலி குணமாக வாங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் முஸ்தபா. இவர், பல் வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள மருந்துகடையில் நேற்று மாத்திரைகள் வாங்கினார். வீட்டிற்கு சென்ற முஸ்தபா அதை சாப்பிடுவதற்காக பிரித்தபோது மாத்திரையின் உள்பகுதியில் சிறிய கம்பி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்தபா உடனடியாக மாத்திரையை எடுத்துக்கொண்டு, அதை வாங்கிய மருந்து கடைக்கு கொண்டு சென்று விற்பனையாளரிடம் முறையிட்டார். மேலும், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

 இதனைதொடர்ந்து கோவை மருந்துகள் ஆய்வாளர் சம்மந்தப்பட்ட கடையில் சென்று, மாத்திரைகளின் மாதிரிகளை சேகரித்தார். இந்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படும் எனவும், 15 நாட்களில் ஆய்வு முடிவு தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக மாத்திரை சப்ளை செய்த கம்பெனியிக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கப்படும் என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாத்திரையில் கம்பி இருந்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Wire , Tablet, wire, public
× RELATED நடைமேம்பாலத்தை சீரமைக்கும்போது தவறி...