மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு

மும்பை: மும்பையில் மக்கள் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு முன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கமான நிகழ்வாகும். மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமலிருக்க சுமார் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்படுகின்றன. விநாயகர் சிலைகள் கரைப்பை முன்னிட்டு லால்பாக்கா ராஜா என்ற பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்கு முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட 129 இடங்களில் கடலில் கரைக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரண்டுள்ள பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் போலீசார் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். ஊர்வலம் நடைபெறும் பாதைகளில் ட்ரோன் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய குட்டி விமானம் பயன்படுத்தப்படும் என்றும், 5 ஆயிரம் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் ஊர்வலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். வாகன நெரிசலை கட்டுப்படுத்த 50 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து நகரின் 99 இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Ganesha ,Mumbai , Mumbai, 50 thousand Ganesha statue, police security, meltdown
× RELATED புத்தருக்கான பட்டப்பெயர்களில் ஒன்றுதான் விநாயகர்