இறக்குமதி அதிகரிப்பால் உருக்காலைகள் கலக்கம்

புதுடெல்லி:  தடையில்லா வர்த்தக உடன்பாடு செய்துள்ள நாடுகளில் (எப்டிஏ) இருந்து வரி இல்லாமல் உருக்கு இறக்குமதி கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் 67 சதவீதமாக அதிகரித்துள்ளது.  கடந்த நிதியாண்டில் 2018 ஏப்ரல் - ஜூலை வரையிலான காலத்தில் உருக்கு இறக்குமதி 58 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. கடந்த ஏப்ரலில் மொத்தம் 5,86,000 டன்களாக இருந்த இறக்குமதி, ஆகஸ்ட் இறுதியில் 8,56,000 டன்களாக  அதிகரித்தது. தடையில்லா வர்த்த உடன்பாடு செய்துள்ள நாடுகலில் இருந்து உருக்கு இறக்குமதி அதிகரித்தது என்பது உண்மையில் பெரும் பதட்டத்தை  ஏற்படு–்ததி உள்ளது என்று ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் நிறுவனத்தின் இணை நிர்வாக  இயக்குநர் ஷேஷகிரி ராவ் தெரிவித்தார். பிராந்திய விரிவான வர்த்தக ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா சேர உத்தேசித்து இருப்பது உருக்காலை நிறுவனங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

10 ஆசிய நாடுகள் அமைப்பில் புருனை, கம்போரியா, இந்தோனேஷியா, மலேசியா,  மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பின்ஸ், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றுடன் 6 தடையில்லா வர்த்தக உடன்பாடு செய்துள்ள நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து  ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன. உருக்காலை நிறுவனங்களுடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆர்சிஇபி கூட்டத்தில் பேச்சு  நடத்தும்போது, உருக்கு பொருள்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.உத்தேச உடன்பாட்டின்படி இறக்குமதி வரி கணிசமாக குறைப்பதால், உள்நாட்டில் உள்ள உருக்காலைகள் பெரிதும் பாதிக்கப்படும்  என்றும் தெரிவித்துள்ளன.

Tags : Smelters disturbed
× RELATED கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி 14% குறைந்தது: தேவை 9% சரிவு