பஹ்ரைனில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை... முதல் முறையாக 'ரூபே'கார்டை பயன்படுத்திய மோடி

பஹ்ரைன்: பிரதமர் மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 3 நாடுகள் பயணமாக பிரதமர் மோடி பஹ்ரைன் இன்று சென்றுள்ளார். பஹ்ரைனில் உள்ள கோவிலுக்கு மோடி முதல் முறையாக ரூபே கார்டினை பயன்படுத்தி பிரசாதம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை வலியுறுத்தி வரும் மோடி, பஹ்ரைனில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் கோயிலில் உள்ள இந்திய ஸ்வீட் கடையில் பிரசாதம் வாங்கி உள்ளார். பஹ்ரைனில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயிலில் பிரதமர் மோடி இன்று வழிநாடு செய்ய உள்ளார்.

பின்னர் தனது பஹ்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். பியாரிட்ஸ் நகரில் ஆக-25 மற்றும் 26 ஆகிய நாட்களில் ஜி 7 மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, டிஜிட்டல் தகவல் பரிமாற்றம், கடல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பூடான், சிங்கப்பூருக்கு பிறகு ரூபே கார்டினை அறிமுகம் செய்த நாடு பஹ்ரைன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : PM Modi ,Shreenathji Temple , Bahrain
× RELATED சிஏஏ, ராமர் கோயில் எல்லாம்...