‘யுனிசெப்’ தூதர் பதவி நீக்க கோரிக்கை... பாகிஸ்தான் முயற்சி தோல்வி: பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி

நியூயார்க்: ஐ.நா சபையின் யுனிசெப் தூதர் பதவியிலிருந்து நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. ஐ.நா சபையின் கட்டுப்பாட்டில், உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான உரிமை பாதுகாப்பிற்கான சேவையாற்றி வருகிறது யுனிசெப் அமைப்பு. இதன் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரும் பல்வேறு நாடுகளுக்கு சென்று குழந்தைகளுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் ஜம்மு, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்ததுடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு பிரியங்கா ேசாப்ரா ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தார்.

அதனால், ‘பிரியங்கா சோப்ரா ஐநாவின் யுனிசெப் தூதராக இருந்துக்கொண்டு ஒரு தலை பட்சமாக இந்தியாவுக்கு ஆதரவாக நடந்துகொண்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்து பாகிஸ்தானுக்கு எதிரானதாக உள்ளது. எனவே அவரை தூதர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று யுனிசெப் அமைப்பின் தவைருக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு அமைப்பு கடிதம் அனுப்பியது. ஆனால், பாகிஸ்தான் தரப்பிலான இந்த கோரிக்கையை யுனிசெப் நிராகரித்துவிட்டது. ‘பிரியங்கா சோப்ராவின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். எனவே அவர் தூதர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்’ என்று யுனிசெப் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது. மேலும், பிரியங்கா சோப்ரா தரப்பு, ஐ.நாவின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Tags : Priyanka Chopra, happy
× RELATED சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்:...