மனித உரிமை பிரச்னைகளை தீர்க்க முப்படை அதிகாரிகள் கண்காணிப்பு குழு: ராஜ்நாத் ஒப்புதல்

புதுடெல்லி: ராணுவத்தில் நடக்கும் மனித உரிமை பிரச்னைகளுக்கு தீர்வு காண, முப்படை அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்தல் உள்ளிட்ட ராணுவ தலைமையக அதிரடி மாற்றங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாதுகாப்புத் துறையில் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ள கடந்தாண்டு 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. இவை கடந்த அக்டோபரில் தனித்தனியாக அறிக்கைகளை சமர்பித்தன. அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய கடற்படை, விமானப்படை, ராணுவம் ஆகிய மூன்று பிரிவுகளின், 3 கலோனல் ரேங்க் அதிகாரிகள் தலைமையில், கண்காணிப்பு குழு அமைக்கும் சீரமைப்பு மாற்றத்துக்கு ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்தார்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், இந்த குழு, முப்படைகளின் தலைமை தளபதியின் கீழ் தன்னிச்சையாக செயல்படும். அவரே இக்குழுவின் தலைவர் பதவிக்கான கூடுதல் இயக்குனர் ஜெனரலை நியமிப்பார். இதில் ராணுவத்தில் நிலவும் மனித உரிமை பிரச்னைகளுக்கு ஒரே அமைப்பின் கீழ் தீர்வு காணப்படும். மனித உரிமைகள் அமைப்பு, மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனுபவமிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விசாரணை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மை உடையதாகவும் நடத்தப்படும், என்றனர்.Tags : Human Rights Issues, Armed Forces Monitoring Committee, Rajnath
× RELATED மூதாட்டி புகார் மீது நடவடிக்கை...