×

வருசநாடு பகுதியில் முருங்கை விளைச்சல் அமோகம்

வருஷநாடு: வருஷநாடு பகுதியில் முருங்கை விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், வருஷநாடு மற்றும் அருகில் உள்ள முருக்கோடை, மயிலாடும்பாறை கடமலைக்குண்டு, அய்யனார்கோவில், துரைச்சாமிபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் வறட்சி காரணமாக கடந்த மாதம் வரை முருங்கை மரங்களில் முருங்கை காய்கள் சரிவர விளையாமல் இருந்தது.
இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக முருங்கை காய்கள் நன்கு விளைந்துள்ளன. அவற்றை பறித்து, சின்னமனூர், தேனி, ஆண்டிபட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது கிலோ ஒன்று ரூ.30 முதல் ரூ.32 வரை முருங்கைக்காய்கள் விலை போகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர், புதிதாக முருங்கை நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்து, முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்

Tags : Varusanad, Murukan
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...