×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு: மேல்முறையீடு செய்ய 3 நாள் அவகாசம்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2 மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. மேல்முறையீடு செய்ய ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 3 நாள் அவகாசம் அளித்துள்ளது.

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு நிலுவையில் இருந்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிதம்பரம் மீதான புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Delhi HC,refuses ,grant summons, PC Chidambaram, media case,3 days time to appeal
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...