×

ஒருங்கிணைந்த இந்தியாவை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்னை பெண் பைக் பயணம்

விருதுநகர்: ஒருங்கிணைந்த இந்தியாவை வலியுறுத்தி கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை, சென்னை பெண் பைக்கில் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார். சென்னையில் பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் ராஜலட்சுமி மந்தா. இவர் ஒருங்கிணைந்த இந்தியாவை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பைக்கில் யாத்திரை செல்கிறார். நேற்று முன்தினம் (ஆக.15) கன்னியாகுமரியில் தனது பயணத்தை துவக்கிய ராஜலட்சுமி மந்தா நேற்று விருதுநகர் வந்தார். அவருக்கு விருதுநகரில் வெயிலுக்கு உகந்தம்மன் கோயில் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜலட்சுமி மந்தா கூறுகையில், ‘‘ஒரே இந்தியாவை வலியுறுத்தி தேசியக்கொடியை ஏந்தி முதல் குழுவாக நாங்கள் செல்கிறோம்.

22 பேர் கொண்ட இந்த குழு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 20 நாட்கள் பைக்கில் பயணம் செய்கிறது. ஆக.15ல் கன்னியாகுமரியில் துவங்கிய பயணம், செப்.1ல் காஷ்மீர் ஸ்ரீநகரில் நிறைவு பெற உள்ளது. மொத்தம் 5,200 கிமீ பயணிக்கிறோம். ‘மத்திய அரசு 370 சட்டத்தை விலக்கி கொண்டதற்கு ஆதரவு தெரிவித்தும், இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்’ என்பதை வலியுறுத்தியும் இந்த பயணத்தை மேற்கொள்கிறோம்’’ என்றார்.  உடன் செல்லும் குழுவினர் காந்தி, பாரதி உள்ளிட்ட தலைவர்கள் வேடமணிந்து செல்கின்றனர்.

Tags : Integrated India, Kanyakumari, Kashmir, Girl Bike Ride
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...