×

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கு வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையின் அடிப்படையில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை  மற்றும் பொதுத்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

முந்தைய விசாரணையின்போது புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜியின் வருமானம், சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர்,  தமிழக பொதுத்துறை செயலர் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்தனர்.

விசாரணை அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவற்றின் நடவடிக்கை கைவிடப்பட்ட காரணம் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Rajendra Balaji, Minister of Dairy, adjourned, property case on 26th
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...