கேரள வெள்ள பாதிப்பு : விவசாய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ராகுல் காந்தி கடிதம்

மும்பை : கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள விவசாயிகள், தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ள கூடாது என்றும் கேரளாவில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பெய்த வரலாறு காணாத கனமழையால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags : Heavy Rain, Kerala Farmers, Rahul Gandhi, Reserve Bank, Kerala
× RELATED நாட்டை வழிநடத்துபவர் மீது ராகுல் குற்றச்சாட்டு