×

சென்னை முரசொலி அலுவலகத்தில் ஆக.7ல் கருணாநிதி சிலை திறப்பு: விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு

சென்னை: கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாகத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முரசொலி வளாகத்தில் வருகிற 7ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிதலைமை தாங்குகிறார். இதில் பங்கேற்க பல்வேறு தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. உருவச்சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் உருவச்சிலை திறப்பு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். மம்தா பானர்ஜி,பரூக் அப்துல்லா, நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் நன்றி கூறுகிறார்.

Tags : Rajinikanth, Kamal Haasan, the statue of Karunanidhi
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...