பிரபல நகை கடையில் ரு.12 லட்சம் நகைகள் கையாடல்: மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு

சென்னை: பிரபல நகைக் கடையில் ₹12 லட்சம் மதிப்புள்ள நகைகளை கையாடல் செய்ததாக கடையின் மேலாளர் உட்பட 4 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு ெசய்துள்ளனர்.சென்னை பாண்டி பஜாரில் பிரபல நகைக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் ஆண்டு கணக்கு வழக்குகளை சமீபத்தில் சரிபார்த்தனர். அப்போது, ₹12 லட்சம் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நகைக்கடையின் மேலாளர் கமல்நாத் மற்றும் ஊழியர்கள் வெங்கடேசன், சோலை, ஜெயசங்கர் ஆகியோரிடம் கடை நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, நகைக் கடையின் மேலாளர் கமல்நாத் ஊழியர்கள் 3 பேருடன் சேர்ந்து சிறுக சிறுக ₹12 லட்சம் மதிப்புள்ள நகைக்களை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து நகைக்கடையின் சார்பில் மேலாளர் கமல்நாத்  உட்பட 4 பேர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Case against,4 persons,including,manager,jewelery shop
× RELATED குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி...