×

தமிழ் படங்களில் நடித்த பாலிவுட் ஹீரோயின் கவர்ச்சி நடிகைக்கு 6 மாதம் ஜெயில்

மும்பை: காசோலை மோசடி வழக்கில் கவர்ச்சி நடிகை கொய்னா மித்ராவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. விக்ரம்  நடித்த தூள் படத்தில் ‘கொடுவா மீசை அருவா பார்வை’ பாடலுக்கு நடனம்  ஆடியதுடன் அஜீத் நடித்த அசல் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்திருப்பவர்  கொய்னா மித்ரா. சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்திலும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடினார். இந்தியில் ஏக் கில்லாடி ஏக் ஹசீனா, இன்சான் உள்ளிட்ட  பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் மாடல் அழகி பூனம் சேத்தி  என்பவரிடம் ₹22 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை முழுமையாக திரும்ப  செலுத்தவில்லை. இந்நிலையில் 3 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்திருந்தார்  கொய்னா. காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது பணம் இல்லாமல் திரும்பி  வந்தது. இதையடுத்து கொய்னா மீது மும்பை அந்தேரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்  கோர்ட்டில் பூனம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி  கொய்னாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Tags : Tamil Movies, Bollywood Hero, Actress, Jail
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...