×

வேலூரில் அழிவின் விளிம்பில் வரலாற்று சின்னங்கள்: தொல்லியல் துறையினர் கண்டுக் கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரதான சின்னங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும், இதனை தொல்லியல் துறையினரும் கண்டுக் கொள்ளவில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்த பகவதி அம்மன் கோவில் மலை, கோழிக்கொண்டை மலை ஆகியவற்றில் ஏராளமான பழங்கால சின்னங்கள் மறைந்து கிடக்கின்றன. மேலும் கி.மு 5000 ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள், சமணர் கால பாதம் வடிவிலான சின்னங்கள், கற்குகைகள் என ஏராளமான சின்னங்கள் நிறைந்து கிடக்கின்றன. மேலும் இது மட்டுமில்லாது வேலூரின் மையப்பகுதியில் கி.மு. 2000 ஆண்டு பழமையான பெருகற்கால மனிதர்களால் ஈமச்சடங்கு செய்யும் இடங்களும் ஆய்வாளர்களால் கட்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த சின்னங்கள் அனைத்தும் அரசின் கண்களில் மட்டும் இதுவரை படாததால் எந்த பாதுகாப்புமின்றி அழிந்து வருகின்றன.

இதை தொடர்ந்து தமிழன் கி.மு 5000 ஆண்டுக்கு முன்பே ஒரு நாகரிக வாழ்க்கை முறையை கொண்டவன் என்பதற்கு சான்றாக நிற்கும் இந்த வரலாற்று சின்னங்களை உடனடியாக தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதோடு வேலூர் கோட்டை குறித்த புகழை பறைசாற்றும் விதமாக சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் எனவும் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இந்த வரலாற்று சின்னங்கள் அனைத்தும்  தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு அவற்றின் சிறப்புகள் குறித்து உலகறிய செய்தால் வேலூர் சிறந்த சுற்றுலாத்தளமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

இதை தொடர்ந்து வேலூரின் மையப்பகுதியில் இருக்கக்கூடிய இந்த அரியவகை பிரதான சின்னங்கள் எல்லாம் அழிவின் விளிம்பில் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதனை முறையாக அரசாங்கம் கையில் எடுத்து பராமரித்தல் மற்றும் பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் தமிழர்களின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் காக்கவேண்டும் என்பதே இங்குள்ள சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கின்றது.


Tags : Vellore, Margin of Destruction, Historical Sites, Archeology, Missing, Social Activists
× RELATED சமூக வலைதளங்களை பயன்படுத்த...