காஞ்சிபுரத்தில் ஏரியில் குளிக்க சென்றபோது நிகழ்ந்த விபரீதம்: சேற்றில் சிக்கி 2 சிறுவர்கள் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே ஏரியில் குளித்த போது சேற்றில் சிக்கி இரு சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் மற்றும் திலீப் ஆகிய இருசிறுவர்கள். இந்த சிறுவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் சேற்றில் சிக்கினர். மேலும் இதை அடுத்து அவர்கள் உடனிருந்த நண்பர்கள் சேற்றில் சிக்கிய சிறுவர்களை கண்டு கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து சிறுவர்களின் சத்தம் கேட்டு அங்கு கூடிய கிராமத்தினர் அனைவரும் ஏரியில் குதித்து இரு சிறுவர்களையும் மீட்டனர்.

ஆனால் அப்போது சோகத்தை ஏற்படுத்தும் வகையில் சிறுவன் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான். இதை தொடர்ந்து மற்றொரு சிறுவனான திலீப்பை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். ஆனால் அச்சிறுவன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே  உயிரிழந்தார். இதையடுத்து சிறுவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போர் அனைவரையும் கண் கலங்க வைத்தது. மேலும் இதை தொடர்ந்து திலீப்பின் கண்கள் சங்கரா கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டன. மேலும் கண் தானத்தின் மூலம் தங்கள் மகன் பிறருக்கு வாழ்வளித்து மரணத்திற்கு பிறகும் உயிர் வாழ்வான் என்று அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

Tags : Kanchipuram, lake, bathing, accident, mud, 2 boys killed
× RELATED கார் விபத்தில் 2 வாலிபர்கள் பலி