திருவனந்தபுரத்தில் அபராத தொகையுடன் கம்பி நீட்டிய எஸ்ஐ கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில்  போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் வசூலித்த அபராத  தொகையுடன் மாயமான சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.திருவனந்தபுரம்  அருகே நெய்யாற்றின்கரை கோட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் நயீம்(52). இவர்  திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக  பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் வழக்கம்போல வாகனங்களை சோதனை  செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை  மீறியவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்தார். இதில் ₹7,000க்கு மேல்  வசூலாகி உள்ளது.ஆனால், பணத்தை ஸ்டேஷனில் ஒப்படைக் காததுடன் பணிக்கும் வரவில்லை. இதற்கிடையே  நயீமின் மனைவி டிஜிபியிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது கணவரை  போலீசார் வீட்டுக்கு வந்து மிரட்டினர் என தெரிவித்திருந்தார். இந்த புகார்  குறித்து விசாரிக்க டிஜிபி லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டார். விசாரணையில் அது  பொய்யான புகார் என ெதரியவந்தது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நயீம் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு  வந்தார். இந்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.  நயீம் அபராத ரசீதில் மோசடி செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சமீபத்தில் தும்பா போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அபராதம்  வசூலிக்கும் ரசீதில் மோசடி செய்தது தெரியவந்தது. அவர் அபராத தொகையாக 500  ரூபாய் வாங்கிவிட்டு ரசீதில் ₹100 என திருத்தி மோசடி செய்துள்ளார். இதுபோல நயீமும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Tags : Wireless SI,arrested, fines , Thiruvananthapuram
× RELATED தி.மலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்...