இ. கம்யூனிஸ்ட் பொது செயலாளராக டி.ராஜா தேர்வு

புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.சுதாகர்ரெட்டி இருந்து வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில்,  கட்சியின் புதிய  பொதுச் செயலாளராக டி.ராஜா எம்.பி. தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து அவர் முறைப்படி நேற்று கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் டி.ராஜா அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : e. T. Raja, elected,Communist,General Secretary
× RELATED பெரியாரை பற்றி பேசும்போது ரஜினி சிந்தித்துபேச வேண்டும்: டி.ராஜா பேட்டி