×

22-ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்-2 : இஸ்ரோ தகவல்

பெங்களூரு: தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட  சந்திராயன்-2 வரும் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக  சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி  கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீீஹரிகோட்டாவில்   உள்ள  சதீஷ்தவான் ஏவுதளத்தில்  இருந்து விண்ணிற்கு அனுப்ப ஏற்பாடுகள்  செய்யப்பட்டது. அப்போது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் எரிபொருள்  நிரப்பும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, தற்காலிகமாக விண்கலம்  நிறுத்தப்பட்டது. ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறுகளை அதிகாரிகள் சரி செய்து மீண்டும் தயார் நிலைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து இஸ்ரோ தனது டிவிட்டர் பதிவில், ‘‘கடந்த  ஜூலை 15ம் தேதி விண்ணில் செலுத்த இருந்த சந்திராயன்-2 தொழில்நுட்ப கோளாறு  காரணத்தினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொழில்நுட்ப  கோளாறு சரி  செய்யப்பட்டதை வரும் 22ம் தேதி  திங்கட்கிழமை பிற்பகல்  2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும். முன்பை விட தற்போது  விண்கலம் வலுவாக உள்ளது. சந்திரயன்-2, ஒரு பில்லியன் கனவுகளை சந்திரனுக்கு  எடுத்துச்  செல்ல தயாராக உள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Chandrayaan-2, ISRO ,Information
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...