×

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன: துணை முதலமைச்சர் சட்டப்பேரவையில் பதில்

சென்னை: கஜா புயலானது 2018ம் ஆண்டில் பருவமழை காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். மேலும் இதில் ஏராளமான வீடுகள் புயல் காரணமாக சேதம் அடைந்தன. இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாவ அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய அவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகளாக 16 ஆயிரத்து 695 வீடுகளும் மேலும் அடுக்குமாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னிர் செல்வம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கஜா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்ததின் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தனி வீடுகளாகவும், நிலம் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளாகவும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் நிலம் உள்ளவர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் கான்கிரீட் வீடு கட்டுவதற்கான காசோலை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 


Tags : Gaja Storm, Victims, Homes, Deputy Chief Minister, Responding to Legislative Assembly
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்