×

அனுமனுக்கு தங்க கிரீடம் வழங்கினார் யோகி

முசாபர்நகர்:  உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமான் கோயிலுக்கு 2.5 கிலோ எடை கொண்ட தங்க கிரீடத்தை வழங்கியுள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் சுக்ராட்டல் மாவட்டத்தில் அனுமான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 75 அடி உயரத்தில் அனுமான் சிலை உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோயிலுக்கு சென்று உ.பி. முதல்வர் யோகி வழிபாடு நடத்தினார். அப்போது கோயிலுக்கு 2.5 கிலோ எடை கொண்ட தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது அனுமானை தலித் சமூகத்தை சேர்ந்தவர் என முதல்வர் யோகி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



Tags : Yogi,Hanuman
× RELATED நடிகர் விவேக் மரணம் முக்கிய...