×

தடுப்பணையில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு: திற்பரப்பில் அனைத்து கட்சிகள் தர்ணா

குலசேகரம்: கோதையாற்றின் குறுக்கே திற்பரப்பு அருவியின் மேல்பகுதியில் தடுப்பணை உள்ளது. இதில் இருந்து திற்பரப்பு வலதுகரை, இடதுகரை என 2 கால்வாய்கள் செல்கின்றன. திற்பரப்பு தடுப்பணையில் களியல் பகுதியில் நீர் உறுஞ்சும் கிணறு அமைத்து வில்லுக்குறி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஏற்கனவே தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்தநிலையில் அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு இதேபகுதியில் நீர் உறுஞ்சும் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்னை தலைதூக்கும். விவசாய கால்வாய்களுக்கு தண்ணீர் கிடைக்காது. சுற்றுலா பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

திற்பரப்பு அருவியின் கீழ்ப்பகுதியில் மாற்று இடம் தேர்வு செய்து தண்ணீர் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை வலியுறுத்தி திற்பரப்பு சந்திப்பில் நேற்று மாலை அனைத்து கட்சிகள் சார்பில்  தர்ணா போராட்டம் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். தக்கலை ஒன்றிய திமுக செயலாளர் அருளானந்த ஜார்ஜ், விவசாய தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர் அலாவுதீன், திமுக பேரூர் செயலாளர்கள் வின்சென்ட், ஜாண்சன், அலக்ஸாண்டர், மாவட்ட பிரதிநிதிகள் ஜோஸ் எட்வர்டு, சதீஷ், வர்த்தகரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெ.எம்.ஆர். ராஜா, திற்பரப்பு பேரூர் முன்னாள் துணைச்செயலாளர் யோபு, திருவட்டார் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜெறோம், முன்னாள் மாவட்ட பொருளாளர் மணி, பாஜ முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் சுஜித்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் மனோகரன், செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஸ்டாலின்தாஸ், சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் சகாய ஆண்டனி, ரவி, வட்டார செயலாளர்கள் விஸ்வாம்பரன், வில்சன், திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்ட்டன் கிளிட்டஸ், மாவட்ட துணைத்தலைவர் ராஜரெத்தினம், குலசேகரம் முன்னாள் நகர தலைவர் எபனேசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Block, opening, darna
× RELATED தன்னுடன் சேர்ந்து குடும்பம்...