×

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்த தேர்தல் முடிவுகள்..... ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகியவை தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வென்றுள்ளார். வீரப்ப மொய்லி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் படு தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தனர். கர்நாடகாவில் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி அரசு தேர்தலுக்குப் பின் நீடிக்காது என்று பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.

ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்று இருக்கும் நிலையில், மேலும் சில எம்எல்ஏக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆளும் மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம் என்று  கூறப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, மாலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதுடன், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Congress ,election ,coalition ,Karnataka ,BJP , Karnataka, Congress, Janata Dal, BJP
× RELATED மோடியின் உத்தரவாதம் தடயம் இன்றி மறைந்தது: ப.சிதம்பரம் விமர்சனம்