×

தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பாஜக பிடிக்காத நிலையில், தேசிய அளவில் ட்ரெண்டான #TNRejectsBJP!

சென்னை: மக்களவை தேர்தல் முடிவில் பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்காத நிலையில், #TNRejectsBJP என்ற ஹஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பாஜ தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர். தமிழகத்தில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜ தலைமை 5 வேட்பாளர்களுக்கும் கடும் நெருக்கடியை கொடுத்து வந்தது. இதனால் மிகவும் பிரபலமானவர்களையே வேட்பாளர்களாகவும் நிறுத்தியது. கட்சி தலைமையின் கடும் நெருக்கடியை தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களுடைய தொகுதிகளில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தை மேற்கொண்டனர். வேட்பாளர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற வாசகத்தையே முன்மொழிந்து வந்தனர்.

குறிப்பாக, பிரதமர் மோடியும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்தும் தமிழகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில், தேசிய அளவில் பாஜ பெரும் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற போதிலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இது பாஜ தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த நிலையில் தற்போது #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஒருபக்கம் நாடு முழுவதும் பாஜகவினர் தங்களது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக மக்கள் #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஐந்து வருடங்களுக்கு கோபேக் மோடி என்ற கோஷமே தமிழகத்தில் எழும் என்பதால் பாஜகவை பொருத்தவரையில் தமிழகம் எப்போதுமே ஒரு சர்ச்சைக்குரிய மாநிலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP ,Tamilnadu , Tamil Nadu BJP, Twitter, Trenf, TNRejectsBJP
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...