×

வெயிலால் குறைந்தது வரத்து தக்காளி விலை தாறுமாறாக உயர்வு

பழநி : கொளுத்தும் வெயிலின் காரணமாக வரத்து குறைவானதால் பழநியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. போதிய நீர் இல்லாததால் கிணற்று பாசனத்தை நம்பி காய்கறி விவசாயம் ஆங்காங்கே நடந்து வருகிறது. எனினும், போதிய மழை, கொளுத்து வெயிலின் காரணமாக விற்பனை சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பழநி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி யோகேஸ்வரன் கூறியதாவது, போதிய மழை இல்லாததால் செடிகளில் தக்காளி பெருக்க முடியாமல் போனதால் வரத்து குறைந்து விட்டது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.25க்கு விற்பனையான தக்காளி தற்போது கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் தற்போது கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் தற்போது கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகின்றன. கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அவரை தற்போது கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பட்டர் பீன்ஸ் தற்போது கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை பட்டாணி தற்போது கிலோ ரூ.190க்கு விற்பனை செய்யப்படுகின்றன. கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லித்தழை தற்போது கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : palani,Tomato price,tomato, summer rain
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...