அயர்லாந்து அணியிடம் ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி

பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 72 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஸ்டோர்மான்ட், சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. அயர்லாந்து அணி 48.5 ஓவரில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் 71, கேப்டன் போர்ட்டர்பீல்டு 53 ரன், கெவின் ஓ பிரையன் 32 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 35.4 ஓவரிலேயே 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அஸ்கர் ஆப்கன் அதிகபட்சமாக 29 ரன் எடுத்தார். முகமது நபி 27, கேப்டன் குல்பாதின் 20, ரஷித் கான் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடேர் 4, ரேங்க்கின் 3, முர்டாஹ் 2, கெவின் ஓ பிரையன் 1 விக்கெட் வீழ்த்தினர். அயர்லாந்து 1-0 என முன்னிலை வகிக்க, கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.


× RELATED ஷாகிப், முஷ்பிகுர் அரை சதம் ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன் இலக்கு