×

116 தொகுதிகளுக்கு நடந்த 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: அதிகப்பட்சமாக மேற்கு வங்கத்தில் 74.57% வாக்குப்பதிவு

டெல்லி: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்காக 116 தொகுதிகளில் நடந்த 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,  முதல்கட்ட தேர்தல் கடந்த 11ம் தேதியும் 91 தொகுதிகளிலும், 2ம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம்,  குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 116 மக்களவைத் தொகுதிகளுக்கு 3-ம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6  மணிக்கு நிறைவடைந்தது.  

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நிசான் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி  பெற்றார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ,பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, சத்தீஸ்கர் முதல்வர்  பூபஷ் பாகேல், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் கர்நாடக முதல்வர் மற்றும் பா.ஜ.க தலைவர் ஜகதீஷ் ஷெட்டர், மூத்த காங்கிரஸ் தலைவர் அஹ்மத் படேல், காங்கிரஸ்  ஹார்டிக் படேல், PDP தலைவர் மெஹ்போபா முஃப்தி, பிரபல நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்டோர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி, கர்நாடகாவில் 60.57 சதவிதமும்,  அசாமில் 72.49 சதவிதமும், உத்திரப்பிரதேசத்தில் 53.78 சதவிதமும், பீகாரில் 54.91 சதவிதமும், மேற்கு வங்கத்தில் 74.57 சதவிதமும், சத்தீஸ்கரில்  59.16 சதவிதமும், கோவாவில் 68.37 சதவிதமும், குஜராத்தில் 56.27 சதவிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் ஜம்மு&காஷ்மீரில் 11.22 சதவிதமும், கேரளாவில் 67.68 சதவிதமும், மஹாராஷ்ராவில் 52.53 சதவிதமும்,  ஒடிசாவில் 54.18 சதவிதமும், திரிபுராவில் 69.09 சதவிதமும், தாத்ரா& நாகர் ஹவேலியில் 56.81 சதவிதமும், டாமன்& டையூவில் 64.82 சதவிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituencies ,West Bengal , 116 constituencies, West Bengal, voting
× RELATED வாக்களிப்பின் ரகசியத்தை காத்த...