×

பாலியல் வழக்கு விசாரணைக்காக மாநில அரசுகளுக்கு 3,100 சிறப்பு உபகரண பெட்டிகள்: மத்திய அரசு வழங்கியது

புதுடெல்லி: பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் உடனடி விசாரணை நடத்துவதற்கு உதவும் வகையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3,100 சிறப்பு உபகரண பெட்டிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் அல்லது பலாத்கார வழக்குகளை போலீசார் விசாரணை நடத்தும்போது பல்வேறு ஆதாரங்கள் மறைந்து விடுகின்றன. வழக்குக்கு வலு சேர்்க்கும் வகையில் அவற்றை உடனடியாக சேகரிப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.  அதன்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 3,100 உபகரண பெட்டிகளை வழங்கியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், “பாலியல் குற்றங்களில் உடனடியாக விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக ரத்த மாதிரிகள், உயிரணு மற்றும் இதர ஆதாரங்களை சேகரிக்க, சிறப்பு உபகரண பெட்டி வழங்கப்பட்டு–்ள்ளது. இவற்றில் உள்ள கருவிகளை பயன்படுத்துவது குறித்து போலீசார், மருத்துவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தை சேர்ந்த விசாரணை அதிகாரிகள், மருத்துவர்கள் 2,575 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 15,640 காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. அந்தந்த மாநிலங்கள் தேவைக்கு ஏற்றபடி இந்த உபகரண பெட்டிகளை கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state governments ,Central Government , sex investigation, State Governments, Central Government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...