×

அமைதி, வளத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய உறவை இந்தியா - பாக்., இடையே ஏற்படுத்துவோம் : இம்ரான் கான்

இஸ்லாமாபாத்; பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அந்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, துணை கண்டத்தில் ஜனநாயகம், அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்றுவதற்கு இதுவே சரியான நேரம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், பயங்கரவாதம் மற்றும் வன்முறை அற்ற சூழலை நாம் நமது பிராந்தியத்தில் உருவாக்குவோம் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மோடியின் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ள இம்ரான்கான், மோடியின் வாழ்த்துச் செய்திக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். காஷ்மீர் உள்பட 2 நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அழைப்பு விடுத்துள்ளார். அமைதி மற்றும் வளத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய உறவை இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்துவோம் என்றும் இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் தனது தேசிய தினத்தை இன்று கொண்டாடுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த பாகிஸ்தான் தேசிய தின கொண்டாட்டத்தை, இந்தியா புறக்கணித்த சில மணி நேரங்களில் இம்ரான் கான் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,Imran Khan ,India , Pakistan, National Day, Prime Minister Narendra Modi, Imran Khan
× RELATED வீட்டு காவலில் இருந்த இம்ரான்கானின் மனைவி சிறைக்கு மாற்றம்