×

சுடுகாட்டில் தியானம் , கிளி ஜோசியம் உள்ளிட்டவற்றை நம்பி அரசியல் செய்யவில்லை : ஈவிகேஎஸ் சுளீர்

சென்னை: சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ தான் அரசியல் செய்யவில்லை என்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ். திருநாவுக்கரசர் ஆகியோருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நான் சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ அரசியல் செய்பவன் அல்ல. தேனி மக்களவைத் தொகுதியில் பிற வேட்பாளர்களை நான் போட்டியாளராக கருதவில்லை. மக்கள் குறைகள் என்னவென்று அறிந்து அதனைத் தீர்க்க முழு மூச்சோடு பாடுபடுவேன். 50 வருட அரசியலில் கரைபடியாத கரம் என பெயர் எடுத்துவைத்திருப்பவன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரையே நேருக்குநேர் எதிர்கொண்டேன். தற்போதைய முதல்வர், துணை முதல்வரை கண்டு அஞ்சப்போவதில்லை. அவர்களை அவர்களிடத்திலேயே தோற்கடிப்பேன் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bedroom ,joshi ,EQUVIES Sleeper , Meditation, Parrot Jossi, Congress, EKKS Ilangovan
× RELATED கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில்...